தேசிய மக்கள் சக்தியின் எம்.பியின் உறவினருக்கு விளக்கமறியல்

தேசிய மக்கள் சக்தியின் எம்.பியின் உறவினருக்கு விளக்கமறியல்

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் உறவினரை பெப்ரவரி 17 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்க மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வென்னப்புவவில் நேற்று (14) நடந்த விபத்து தொடர்பான விசாரணையின் போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் நேற்று வென்னப்புவவில் சைக்கிள் ஒன்றுடன்  விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் பாதையை விட்டு விலகி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்களில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனத்தை செலுத்திய முகமது பைசல் எம்.பியின் உறவினர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பெப்ரவரி 17 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share This