மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி

மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி

மூத்த ஊடகவியலாளர் அமரர். இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நாணயக்கார, செயலாளர் திலங்க காமினி , பொருளாளர் மு. இராமசந்திரன், தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இனைந்து அண்ணாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை,கொழும்பில் அமரர். இராஜநாயகம் பாரதியை நினைவுக்கூறும் விசேட அஞ்சலி நிகழ்வொன்றும் இடம்பெற உள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30க்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்க பிரதான மண்டபத்தில் அந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

 

Share This