ரணில் அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார்

ரணில் அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதிக்குள் இரண்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உள்ளார்.

அவரது முதல் வெளிநாட்டு பயணம் இன்று இடம்பெறுகிறது. இன்று மாலை அவர் ஓமான் செல்கின்றார்.

ஓமானில் நடைபெறும் பொருளாதார  மாநாடொன்றில் சிறப்புரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளதுடன், அதன்பின்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

 

 

Share This