அரசாங்கத்துக்கு கரும்புள்ளி ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய தயாராகவே உள்ளேன் – முன்னாள் சபாநாயகர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தன்னால் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாக நினைத்தால் அதற்காக வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார்.
இந்த கரும்புள்ளியை சரிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் கூறினார்.
“அரசியல்வாதிகளாக, நாங்கள் பதவிகளை வகிக்க அரசியல் செய்யவில்லை. எந்தவொரு சவாலிலும், நாங்கள் நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்துகிறோம். அதுதான் எங்கள் அரசியல்.
நாங்கள் எந்தப் பொறுப்பைப் பெற்றாலும், இந்த நாட்டு மக்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் தியாகங்களைச் செய்யத் தயாராகவே உள்ளோம். அதன் காரணமாகவே அரசியலில் நுழைந்துள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.