மார்ச் 19 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

மார்ச் 19 ஆம் திகதி பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஆய்வுக்காக விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் குறிப்பிட்ட திகதிக்குள் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது.

அதன்படி கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் விண்வெளியில் இருந்தபடியே இருவரும் கொடுத்த பேட்டியில்,

“நாசாவின் க்ரூ – 10 விண்கலம் மார்ச் 12 ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்படும் எனவும் மார்ச் 19 ஆம் திகதி நாங்கள் பூமிக்குத் திரும்புவோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.

Share This