தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிரான வழக்கு – ஜூன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் எழுந்த பிரச்சினைகளையடுத்து வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கை நேற்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பயஸ் ரசாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது வழக்கின் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது தொடர்பில் பிரச்சினை எழுந்த போது அது சம்பந்தமாக தீர்மானிப்பதற்காக வழக்கை நான்கு மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.