த.வெ.த தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர்களுக்க ஒய், இசட் எனும் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யவுள்ள விஜய்யுடன் இப் பாதுகாப்பு படையினரும் பயணம் செய்வர் எனக் கூறப்படுகிறது.