சுமார் 500 பாடசாலைகளில் பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை

சுமார் 500 பாடசாலைகளில் பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 500 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசறி பெர்ணான்டோ தெரிவித்தார்.

கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலைகளில் குடிநீரைப் பாதுகாப்பதற்கான சரியான அமைப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலை மலசலக்கூடங்கள் மற்றும் தண்ணீர் வசதிகளில் சிக்கல்கள் நிலவுவதால் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு திட்டங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

வடமேற்கு, ஊவா, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள சில பாடசாலைகளில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்று பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டப்பட வேண்டிய கழிப்பறைகளின் எண்ணிக்கையை உள்ளடக்கிய சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சில பாடசாலைகளில் அந்த சுற்றறிக்கையின்படி கூட போதுமான கழிப்பறைகள் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தற்போதுள்ள கழிப்பறைகள் கூட மாணவர்கள் மிகவும் அழுக்காகப் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவது குறித்து பாடசாலை மாணவர்களுக்கு சரியான அறிவை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Share This