ரெட்ரோ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ரெட்ரோ.
இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் சிறையில் இருந்தபடி அவரது காதலியை நினைத்து பாடுவதாக இக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.