12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும். அந்த வகையில் 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் என்னெவென்று பார்ப்போம்.
மேஷம்
வெளிநாடுகளுக்குச் செல்ல விசா கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சட்டத்துக்கு எதிராக நடப்பவர்களின் நட்பை தவிர்க்கவும்.
ரிஷபம்
பணிச்சுமை இருக்கும். வேலைகளில் பிள்ளைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாகும். கேட்ட கடன் கிடைக்கும்.
மிதுனம்
சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு அதிகமாகும். ஏதேனும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.
கடகம்
வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். திருமண பேச்சு வார்த்தைகள் தள்ளிப் போகும்.
சிம்மம்
வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். காதலிப்பவர்கள் பெற்றோரிடம் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
கன்னி
உடல் நலம் நன்றாக இருக்கும். தொழில் இரகசியங்களை வெளியில் விட வேண்டும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நடக்கும்.
விருச்சிகம்
வீட்டில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்கள் மற்றவர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புது சொத்து வாங்குவீர்கள்.
தனுசு
நண்பர்கள் உங்களின் நிலையை புரிந்து கொள்வார்கள். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை.
மகரம்
இன்று விழிப்புடன் இருப்பது நல்லது. மற்றவர்களுடன் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்ளவும். அமைதி காப்பது நன்மையளிக்கும். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் மேலதிகாரிகளுக்கு செல்லக்கூடும்.
கும்பம்
வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி அதிகம் சம்பாதிப்பீர்கள். தம்பதியருக்கிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம்
உடல் நலம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த துணை உங்களுக்கு கிடைப்பர். காதல் கைகூடும் நாள் இன்று.