கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி
![கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Eye-Clinic-Unit-of-the-Kandy-National-Hospital-Closed-A-Staff-Tested-Positive-for-COVID19.jpg)
தற்போது ஸ்தம்பிதமடைந்து காணப்படும் கண்டி தேசிய வைத்தியசாலையின் 4 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய சுமார் 1,500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் தற்போது இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் சுயலாபங்களுக்காகக் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத இவ்வாறான நிர்மாணப் பணிகள் தற்போது பாரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவற்றை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.