தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு

தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு

தாய்வானின், தைசங் நகரிலுள்ள ஷின் கோங் மித்சுகோஷி எனும் பல்பொருள் அங்காடியொன்று 12 ஆவது தளத்தில் இயங்கி வருகிறது.

இதில் உணவு விற்பனை செய்யும் குறித்த பகுதியில் திடீரென இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அங்குள்ளவர்களை மீட்டுள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This