ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் திருப்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் திருப்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, சட்டமா அதிபர் இன்று (13) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு இவ்வாண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாகவும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் அண்மையில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This