சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்

சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டார்.

இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பின்புலத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை டிரம்ப் புட்டினுடன் முதல்முறையாகத் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.

புட்டினுடன் நீண்ட நேரமாகப் பேசியதாகவும் கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

ரஷ்யா-உக்ரேன் போர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என இருவரும் ஆலோசித்துள்ளனர்.

இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதன் வாயிலாக அதிலிருந்து உக்ரேன் ஒதுக்கப்படவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Share This