கார் விபத்தில் இருந்து ரிஷப் பந்தை காப்பாற்றிய நபர் தற்கொலைக்கு முயற்சி

கார் விபத்தில் இருந்து ரிஷப் பந்தை காப்பாற்றிய நபர் தற்கொலைக்கு முயற்சி

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்தை காப்பாற்றிய 25 வயதான இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜத் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் தற்கொலைக்கு முயன்று, தனது காதலியுடன் விஷம் அருந்தியுள்ளதாகவும், இதில் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒன்பதாம் திகதி உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள புச்சா பஸ்தியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தங்களின் காதல் உறவை குடும்பத்தினர் எதிர்த்ததன் காரணமாக ரஜத் மற்றும் அவரது 21 வயதான காதலி விஷம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெவ்வேறு வைத்தியசாலைகளில் அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட போதிலும், யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட உடனேயே, அவரது தாயார் காவல்துறையினரை அணுகி, ரஜத் தனது மகளைக் கடத்திச் சென்று விஷம் அருந்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், ரஜத்துக்கு சிகிச்சை அளித்த வைத்தியர், அவர் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாகவும், இப்போது குணமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்தா 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில் ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்துக்குள்ளான போது ​நிதிஷ் குமார் மற்றும் ரஜத் குமார் ஆகியோர் பந்தின் உயிரைக் காப்பாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This