மத்திய அதிவேக பாதையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய அதிவேக பாதையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதையை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் இதன் முதல் கட்ட கட்டப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிக்கு சீனாவின் EXIM வங்கியிடமிருந்து ஒப்புதலை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன சுற்றுப்பயணத்தின் போது இந்தத் திட்டம் தொடர்பாக நடைபெற்ற பயனுள்ள கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளைமீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This