நாடு முழுவதும் இன்றும் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்றும் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டை  இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி குறைவாக உள்ள நேரங்களில் அமைப்பை நிர்வகிக்க இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மின்வெட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை 2025 பெப்ரவரி 13 ஆம் திகதி இன்று நான்கு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் மின்வெட்டு மேற்கொள்ளும்மாறு விடுத்த கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குக்குழு அங்கீகரித்துள்ளது.

அதன்படி பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுலில்  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.  இதில், தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் மின்சார திறன் 900 மெகாவாட் ஆகும்.

தற்போதுள்ள தண்ணீரை நிர்வகிக்கும் அதே வேளையில் மின்சார விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Share This