புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிசி மீட்பு
![புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிசி மீட்பு புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிசி மீட்பு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/24-6712fa8c8ab25.jpg)
அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிசித் தொகுதியை இன்று (12) நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் இருந்து இந்த அரிசி மீட்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 ஐந்து கிலோ அரிசி பைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
இந்த அரிசி வரவிருக்கும் ரமழான் பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு விற்க தயாராக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.