அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை

அமைச்சர் பதவியை விட்டு தான் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.

சில தினங்களுக்கு மாத்திரமே தாம் அவுஸ்திரேலியாவுக்கு வருகைத் தந்ததாகவும் எதிர்வரும் 20ஆம் திகதி மீள இலங்கைக்கு திரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பதவியை விட்டு தான் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சுகத் திலகரத்ன தொடர்பில் பரவும் செய்தி குறித்து பிரதான சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவிடம் கடிதம் ஒன்றை சமர்பித்த பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு வருகைத் தந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனது தனிப்பட்ட விடயத்திற்காக அவுஸ்திரேலியா வந்ததாகவும், இருப்பினும், தற்போது இலங்கையில் விளையாட்டு அமைச்சகத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Share This