நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை
![நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/1601055174-Maximum-retail-price-for-coconut-gazetted-L.jpg)
நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 – 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் விலை 240 – 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் அளவில் மிகவும் சிறிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை அதிகரிப்பு காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.