இந்தியாவில் பதக்கங்களை குவித்த இலங்கை வீரர்

இந்தியாவில் பதக்கங்களை குவித்த இலங்கை வீரர்

இந்தியாவில் 2025ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின்.

இந்த போட்டியானது ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது. இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அவர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு இருந்தனர்.

தாய் தந்தையருக்கும் இந்த அருமையான வாய்பை அளித்த இலங்கை நாட்டிற்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் அனுசரணை வழங்கிய பிரதான அனுசரணையாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This