17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தரமாக சேவையிலிருந்து நீக்கம்
![17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தரமாக சேவையிலிருந்து நீக்கம் 17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தரமாக சேவையிலிருந்து நீக்கம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/1538474732.jpeg)
பொலிஸ் துறைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தரமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை பொலிஸ் என்ற வகையில், பொலிஸ் துறைக்குள் போதைப்பொருள் பாவனையாளர்களாக நாங்கள் அடையாளம் காணும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புலனாய்வு அமைப்புகள் மற்றும் சிறப்புப் பணியகம் மூலம் நாங்கள் பொலிஸ் அதிகாரிகளைக் கண்காணிக்கிறோம்.
அதன்படி, நாங்கள் இப்போது 17 பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்துள்ளோம். ” எனத் தெரிவித்தார்.