கனா தர்ஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
![கனா தர்ஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கனா தர்ஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Gje-fOtWgAAyNsd.jpg)
கனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். பின்னர் அவர் ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் ப்ளே ஸ்மித் நிறுவனமும் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்த தயாரிப்பில் தர்ஷன் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக அர்ஷா பைஜூ நடிக்கவுள்ளார். மேலும் இப் படத்தில் காளி வெங்கட்,தீனா, வினோதினி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.