
பாதிக்கப்பட்டவர்களில் 88 வீதமானோர் 25,000 ரூபா உதவித்தொகையை பெற்றுள்ளனர்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர் அரசாங்கத்தின் 25,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுள்ளதாக
பாதுகாப்பு அமைச்சகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின்
மீள்கட்டமைப்பு முயற்சியின் கீழ் இந்த பணம் ஒரு பரந்த நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த உதவித்தொகைக்கு கூடுதலாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் ஒரு மாணவணுக்கு தலா 25,000 ரூபா
வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வீடுகள் பகுதியளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு 500,000 ரூபா வழங்கப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகள் மற்றும் நிலம் இரண்டையும் இழந்தவர்கள் 1 மில்லியன் ரூபா இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
