
2026 இன் முதல் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவின் போக்குவரத்துப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 77 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அந்த விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகளில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்டவை.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 500 பேர் மது போதையில் வாகன செலுத்துவதால் கைது செய்யப்படுகின்றனர்.
கொழும்பில் விசேட முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மது அல்லது போதைப்பொருள் உட்கொண்ட பிறகு வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன” என்றார்.
