மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக தகவல்

மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக தகவல்

இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.

இந்த சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக இந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This