
மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி 8,000 பேர் அழைப்பு
கடந்த ஆண்டு இறுதிக்குள், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எட்டாயிரம் பேர் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அழைப்புகள் மனச்சோர்வு, தனிமை மற்றும் தற்கொலை முயற்சிகள் தொடர்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்திற்கு டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் சுமார் ஐயாயிரம் அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட சிலர் சம்பந்தப்பட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள மனநல வைத்தியர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சில நபர்களின் மனநலப் பிரச்சினைகள் குறித்து அங்கொடை மனநல நிறுவனம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
