இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு

தென் கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாவின் கீழ் இலங்கை தொழிலாளர்கள் தென் கொரிய குடியரசில் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க முடியும்.

Share This