77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் சுதந்திர தின விழா தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனவரி 02 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
சுதந்திர தின விழா தொடர்பான ஏற்பாட்டு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்வைக்கப்படவுள்ள கலாசார அம்சங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
77வது சுதந்திர தின விழா இவ்வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான கலாநிதி ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, குமார ஜயக்கொடி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, செயலாளர்களான ஆலோக பண்டார, நாலக களுவெவ, எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.