பாவனையற்ற 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கி மீண்டும் சேவையில் இணைப்பு

பாவனையற்ற 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கி மீண்டும் சேவையில் இணைப்பு

இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டு, இந்த வாகனங்கள் இன்று (24) முதல் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இராணுவ சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகை அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது.

அத்துடன், இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், இராணுவத்தால் வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்கு மாதந்தோறும் செலவிடப்படும் சுமார் 10 மில்லியன் ரூபா அரச நிதியை சேமிக்க முடியும் என்பதுடன், அந்த பணத்தை இராணுவம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியுமென இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், லொறிகள், பஸ்கள், நீர் பவுசர்கள், யூனிபெல்கள், கெப்கள், அம்பியூலன்ஸ்கள், வேன்கள், கழிவுநீர் பவுசர்கள் உள்ளிட்ட 76 வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This