
வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கையா?
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் டிடிபி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீண்டும் டிடிபி அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதாகவும், ஜனவரி 23ஆம் திகதிக்குள் திரா பகுதியை விட்டு வெளியேறுமாறும் மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளதாவது, “திரா நகரில் எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மாறாக அங்கு நிலவும் கடும் குளிரே மக்களின் இடப்பெயர்ச்சிக்குக் காரணம்” என்றார்.
