7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

திவுலபிட்டிய நகருக்க அருகில் 7 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இந்த கஜமுத்துக்களை 2 கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைதான நபர்களிடமிருந்து சுமார் 13 கிராம் 5 மில்லிகிராம் நிறையுடைய 7 கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 33 வயதுடைய மாத்தளை மற்றும் மஹாவெல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This