ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 பேர் பலியாகினர். எனவே, இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந் நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

இந்நிலையில் முன்செஸ்க் நகரிலுள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது அங்கிருந்த சிறை பாதுகாவலர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.

சுமார் ஆறாயிரம் கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This