தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி

தோட்டப்புற பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்புகள் – இந்தியா நிதி உதவி

தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுதல்’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையில் இன்று 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஊடாக நுவரெலியாவில் உள்ள 48 பாடசாலைகளிலும், இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 6 பாடசாலைகளிலும் இவ்வாறு 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவப்பட உள்ளன.

Share This