5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்

5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிகளுக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

வனஜீவராசிகள் திணைக்களம் மட்டுமன்றி, காவல்துறை திணைக்களத்தின் பணிகளை வலுப்படுத்தவும் சிவில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர்.

இதன்படி, சுமார் 10,000 வீரர்களை காவல்துறையுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொதுமக்களது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிவில் பாதுகாப்புப் படையின் ஒட்டுமொத்த வினைத்திறனை (Efficiency) அதிகரிப்பதற்குத் தேவையான பயிற்சிகள், மனித வள மேலாண்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

படையினரின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களைப் பல்வேறு அரச சேவைத் துறைகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரச நிர்வாகப் பணிகளில் மனித வளத்தைச் சரியாகப் பங்கீடு செய்யும் அரசாங்கத்தின் புதிய கொள்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )