பட்டாசு விற்பனையில் 50 வீத வீழ்ச்சி
கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மற்ற ஆண்டுகளில் நத்தார் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு உற்பத்தி அதிகளவில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் பட்டாசு விற்பனை சரிந்ததால், உற்பத்திச் செலவை ஈடுகட்ட, பட்டாசுக்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய, உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தேர்தல் காலத்தில் இருந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தினேஷ் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார்.