மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆட்சேர்ப்பு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆட்சேர்ப்பு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரான்ஸில் தனது கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகொட் எனும் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், அவருடைய கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய 50 பேருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அவர் தனது மனைவிக்கு மீண்டும் மீண்டும் போதைப் பொருள் கொடுத்து, அவர் சுயநினைவின்றி இருந்தபோது,
ஏனையவர்களைக்கொண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

72 வயதான டொமினிக் பெலிகொட், அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

பிரான்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது.

Share This