50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – டிரம்ப் ஒப்புதல்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமை காட்டினார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன்.
இது எளிதான காரியம் அல்ல. அது மிகப்பெரிய விடயம். அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அதை செய்தேன். நிறைய செய்துவிட்டேன்’ எனக் கூறினார்.
இந்த பேட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.