மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள ஆதிநாத் கோவிலின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட மரப்பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அம்புலன்ஸ் வசதி இல்லாததால் காயமடைந்தவர்களை ரிக்ஷ்வில் தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீவிரமாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This