வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 கலால் அதிகாரிகள் கைது

வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 கலால் அதிகாரிகள் கைது

கொத்தடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனைக்கு சென்று வீட்டு உரிமையாளர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 05 கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 11 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கலால் திணைக்கள அதிகாரிகள் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து சோதனையிட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.

அப்போது வீட்டில் இருந்த பெண் தடுமாறி, தன்னையும் இரண்டு குழந்தைகளையும் அதிகாரிகள் தாக்கியதாகவும், அப்போது தனது ஆடைகள் கிழிந்ததாகவும் பொலிஸில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து சந்தேகநபர்கள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Share This