49வது தேசிய விளையாட்டு விழா – தங்கப்பதக்கம் வென்று அசத்திய சாமியா யாமிக்

49வது தேசிய விளையாட்டு விழா – தங்கப்பதக்கம் வென்று அசத்திய சாமியா யாமிக்

49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று இடம்பெற்ற 200M பெண்களுக்கான ஓட்ட நிகழ்ச்சியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முகம்மட் பாத்திமா சாமியா யாமிக் 24.33 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

சப்ரகமுவ மாகாணத்தின் ஆர்.எம்.ஆர்.கே. ரத்நாயக்க 24.60 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.ஜி.ஜே.எஸ். விஜேதுங்க 24.88 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

தங்கப் பதக்கம் பெற்றுக் கொண்ட முகம் மட் பாத்திமா சாமியா யாமிக் மத்திய மாகாணம் கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

கண்டி விகாரமாதேவி பெண்கள் பாடசாலையின் பழைய மாணவியான இவர் இலங்கை இராணுவ படைப்பிரிவில் இணைந்து மெய்வல்லுனர் பயிற்சிகளைப் பெற்று வருகின்றார்.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கை இராணுவத்தின் 60வது மெய்வல்லுனர் போட்டிகளிலும் சாமியா யாமிக்100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share This