தீயில் கருகி 49 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வாகையூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் விவசாயம் செய்து வந்ததோடு அவரது வயலில் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது ஆடுகளைப் பார்க்க வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி.
காரணம் ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த அவரது 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்திருந்தன.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் குமார்.
பொலிஸாரின் விசாரணையில் அருகிலுள்ள இடத்தில் விவசாய கழிவுகளை எரித்தநிலையிர் அதன் மூலம் தீ பரவி இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.