55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்றுமுன்தினம் (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் – 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் – 34 படகுகளும்இ 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் – 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில்
கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது.
இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா?
இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்?
வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது.
ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ
ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.