
நேபாளத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
185 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
