
இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு
இன்று முதல் நாளாந்தம் 35,000 முதல் 40,000 ஆயிரம் வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு 24 மணி நேரமும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார் .
தொடர்ச்சியான விநியோக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது .
அத்துடன் அந்த நிறுவனம் தற்போது நாளாந்தம் சுமார் 1,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுகிறது.
