உலகளாவிய ரீதியில் 4 பில்லியன் பேர் மூளை நோய்களால் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் 4 பில்லியன் பேர் மூளை நோய்களால் பாதிப்பு

உலக மக்கள் தொகையில் சுமார் 4 பில்லியன் பேர் அடையாளம் காணப்பட்ட 400 மூளை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது உலகின் 8 பில்லியன் மக்கள் தொகையில் அரைவாசி ஆகும்.

அதன்படி, மூளையை அதிகம் பாதிக்கும் முக்கிய நோய்களாக பக்கவாதம், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி, தலைவலி, கால்-கை வலிப்பு, நீரிழிவு நோயால் புற நரம்பு மண்டலத்திற்கு சேதம் போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதன் மூலம் 90 வீதத்துக்கும் அதிகமான நோய்களை தடுக்க முடியும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This