
பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால பண உதவி, மீட்புத் திட்டங்கள் மூலம் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மீட்டெடுக்கவும், விவசாயம், மீன்வளத் துறைகளை மேம்படுத்தவும், நீண்ட காலத்திற்கு சமூக பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
CATEGORIES இலங்கை
