செம்மணியில் இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணியில் இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளின் போது இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டு, புதிதாக அகழப்பட்ட பகுதியில் ஒரு சிறுமியின் ஆடை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This