ஒரு நாளைக்கு 35 கிலோ உணவு…உயரத்தில் கின்னஸ் சாதனை படைத்த நீர் எருமை

ஒரு நாளைக்கு 35 கிலோ உணவு…உயரத்தில் கின்னஸ் சாதனை படைத்த நீர் எருமை

தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமாவிலுள்ள நின்லனீ பண்ணையில் வளர்ந்துவரும் கிங் கொங் எனும் பெயரிடப்பட்டுள்ள நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமைக்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

ஐந்து வயதான இந்த எருமை 6 அடி 0.8 அங்குல உயரம் கொண்டுள்ளது. சராசரியான நீர் எருமைகளைப் பார்க்கிலும் இது 20 மடங்கு அதிகம்.

கிங் கொங் இற்கு நாள்தோறும் 35 கிலோ உணவு வழங்கப்படுகிறது.

கிங் கொங் 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி பிறந்துள்ளது. அதன் பெற்றோரும் இன்னும் அதே பண்ணையில் தான் உள்ளன என கிங் கொங் இன் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This