தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விலங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து இந்த திருட்டு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மிருகக்காட்சிசாலையின் உதவி இயக்குநர் எஸ்.ஏ.டி.பி. சமன்மாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
திருடப்பட்ட புறாக்கள் அண்மையில் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட புறாக்களின் கூட்டத்தைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புறாக்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டபோது பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒகஸ்ட் இரண்டாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலை இந்த புறாக்கள் ஒப்படைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.